Muralidharan

The Egg (முட்டை)

“The Egg” is a short story written by Andy Weir, whose fame skyrocketed overnight when he published “The Martian” (and Sir Ridley Scott turned it into a film where Matt Damon is left behind ‘again’ and people had to spend a fortune to bring him back). ‘The Egg’ is a relatively unknown but a very impactful short story that idealises love and kindness as the purpose of human existence.

It has stayed with me for a long time now. I felt a sudden urge to translate it to Tamil, as soon as I read. His website features the story translated by the audience throughout the world, in at least 30 languages.

I wrote to him recently with my translation of the story (in Tamil) and he has given me a free hand to use it on my website. Thank you, Andy! So, here it is. You can find the link to the original story in English at the end.

நீ இறக்கும் போது, உன் வீட்டிற்குச் செல்லும் வழியில் இருந்தாய்.

அது ஒரு மகிழுந்து விபத்து. குறிப்பாக எந்த ஒரு தனிச்சிறப்பும் இல்லாத நிகழ்வு அது – ஆனால் அது உன் உயிரைப் பறித்துவிட்டிருந்தது. நீ உன் மனைவியையும், இரு குழந்தைளையும் விட்டுச்சென்றாய். அது உனக்கு ஒரு வலியற்ற மரணமாக இருந்தது. அவசர உதவிக் குழுவினர் தங்களால் இயன்றவரை உன்னைக் காப்பாற்ற செய்த முயற்சி பயனற்றுப் போனது. உண்மையாகவே சொல்கிறேன் – உன் உடம்பு சின்னாபின்னமாய் இருந்ததால் நீ உயிர் பெற்று மீண்டு வராமல் இருந்ததே நல்லது.

அப்போது தான் நீ என்னை சந்தித்தாய்.

“என்ன.. என்ன நடந்தது?”, என்றாய். “நான் எங்கே இருக்கிறேன்?”

“நீ இறந்து விட்டாய்”, நான் இயல்பாக கூறினேன். சுற்றி வளைத்து பேசுவதி வீண்.

“ஒரு… சரக்கு லாரி… அது கட்டுப்பாடிழந்து…”

“ஆம்”, எனறேன் நான்.

“நான்… நான் இறந்துவிட்டேனா?”

“ஆமாம். ஆனால் அதற்காக நீ வருத்தப்படாதே. எல்லாரும் இறந்துதான் ஆகவேண்டும்”, என்றேன்.

நீ சுற்றிப் பார்த்தாய். எங்கும் வெறுமை. நீயும் நானும் மட்டும் இருக்கிறோம்.

“இது என்ன இடம்?” என்றாய். “இது தான் இறப்புக்குப் பிந்தைய வாழ்க்கையா?”

“கிட்டத்தட்ட”, என்றேன் நான்.

“நீங்கள் கடவுளா?”, நீ கேட்டாய்.

“ஆம்”, என்றேன் நான். “நான் கடவுள்”.

“என் குழந்தைகளும்.. மனைவியும்…”, என்றாய் நீ.

“அவர்களுக்கென்ன?”

“அவர்கள் வாழ்க்கை சரியாகிவிடுமா?”

“அதை தான் நான் பார்க்க விரும்புகிறேன்”, என்றேன் நான். “நீ இப்போது தான் இறந்தாய். அதற்குள் உன் கவலை அனைத்தும் உன் குடும்பத்தைப் பற்றியதாக இருக்கிறது. மதிக்கத்தக்க விஷயம்”

நீ என்னை வியப்புடன் பார்த்தாய். உன் கண்களுக்கு நான் கடவுள் போல தெரியவில்லை. ஒரு சாதாரண ஆண் போல தெரிந்தேன். அல்லது, ஒரு பெண்ணாக தெரிந்திருக்கலாம். அல்லது, ஏதோ ஒரு அதிகாரம் படைத்தவனாக. அல்லது, ஒரு இலக்கண வகுப்பு ஆசிரியர் போல. நிச்சயமாக கடவுளாக அல்ல.

“கவலைப்படாதே”, என்றேன். “அவர்கள் நலமாக இருப்பார்கள். உன் குழந்தைகள் உன்னை எல்லா விதத்திலும் சரியான தந்தையாக நினைவில் கொள்வார்கள். உன் மேல் வெறுப்பு உருவாகும் அளவிற்கு காலம் அவர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. உன் மனைவி வெளியே துயரமாகவும், உள்ளே நிம்மதியாகவும் இருப்பாள். நியாயமாக, உன் திருமண வாழ்க்கை முறியும் நிலையில் தான் இருந்தது. உனக்கு ஆறுதலாக இருக்குமென்றால் சொல்கிறேன் – உன் மனைவி அவள் நிம்மதியை இருப்பதை உணர்ந்து குற்ற உணர்ச்சியில் தவிப்பாள்.”

“ஆங்”, என்றாய் நீ. “சரி. இனி என்ன நடக்கும்? நான் சொர்க்கம் நரகம் போன்ற ஏதொ ஒரு இடத்திற்குச் செல்வேனா?”

“இரண்டுமே இல்லை”, என்றேன் நான். “நீ மறுபிறப்பெடுப்பாய்”

“அட”, என்றாய் நீ. “அப்படியென்றால் இந்துக்கள் சொன்னது சரிதான்”

“எல்லா மதங்களும் தத்தம் விதத்தில் சரியானவை”, என்றேன். “என்னுடன் நடந்து வா”

என்னை நீ பின்தொடர, நாம் வெறுமைக்குள் மெதுவாகப் பயனித்துக்கொண்டிருந்தோம்.

“எங்கே செல்கிறோம்?”

“குறிப்பாக எங்கும் இல்லை. பேசும் போது நடப்பதற்கு நன்றாக இருக்கிறது. அவ்வளவு தான்.”

“இது எல்லாவற்றுக்கும் என்ன தான் அர்த்தம்?” என்றாய் நீ. “நான் மீண்டும் பிறக்கும் போது, கறையே இல்லாத ஒரு கரும்பலகை போல் தானே இருப்பேன்? ஒரு குழந்தையாக. இந்த வாழ்வில் நான் பெற்ற அனுபவங்கள், நான் செய்த அனைத்தும் ஓரு பொருட்டே இல்லை தானே?”

“அப்படி இல்லை”, என்றேன் நான். “நீ உன் முற்பிறவிகளிலிருந்து பெற்ற அறிவு, அனுபவம் எல்லாமே உனக்குள் இருக்கிறது. ஆனால், அது எதுவும் உனக்கு இப்போது நினைவில் இல்லை. அவ்வளவு தான்.”

நான் நடப்பதை நிறுத்தி, உன் தோல்களைப் பற்றினேன். “நீ கற்பனை செய்வதை விட உன் ஆன்மா மிக உயர்வானது, அழகானது, பெரியது. நீ யார் என்பதில் ஒரு சிறு துணுக்கை மட்டுமே உன் மனித மூலை தேக்கி வைக்க முடியும். குவளைத் தண்ணீரில் ஒரே ஒரு விரலை விட்டு அந்த நீரின் வெப்பநிலையை அறிவது போன்றது அது. நீ உன் மொத்தத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும் அந்த வடிவத்தில் இடுகிறாய், ஆனால் அதைத் திருப்பி எடுக்கும் போது அங்கு இருந்த எல்லா அனுபவத்தையும் பெறுகிறாய்.

“நீ மனித உருவில் 48 வருடங்கள் இருந்திருக்கிறாய். எனவே, நீ இன்னும் விரிவடையாமலும், அளவற்ற உன் சுய உணர்வை உணராமலும் இருக்கிறாய். இங்கே நாம் போதுமான நேரத்தை கழித்தால், உனக்கு எல்லாமே ஞாபகம் வரத்தொடங்கும். ஆனால், அதை உன் ஒவ்வொரு வாழ்க்கைக்கு நடுவிலும் செய்வதில் எந்தப் பயனும் இல்லை.”

“நான் இதுவரை எவ்வளவு முறை மறுஜென்மம் எடுத்திருக்கிறேன்?”

“ஆங், அதுவா! பல முறை. எண்ணற்ற முறை. வெவ்வேறு விதமான வாழ்க்கைக்குள் பயனப்பட்டிருகிறாய்.” என்றேன். “இந்த முறை நீ கி.பி.540இல் உள்ள ஒரு சீன விவசாயப்பெண்ணாகப் பிறப்பெடுப்பாய்”

“நிறுத்துங்கள்… என்ன?”, நீ தடுமாறினாய். “என்னை கடந்த காலத்திற்கு அனுப்புகிறீர்களா?”

“ஆமாம். முறைப்படி பார்த்தால், காலம் என்பது நீ அறிந்த மட்டில் உன் அண்டத்தில் மட்டும் தான் இருக்கிறது. நான் இருக்கும் இடத்தில் எல்லாம் வேறு விதமாக இயங்குகிறது.”

“நீங்கள் இருக்கும் இடமா?”

“ஆங், கண்டிப்பாக”, நான் விவரித்தேன். “நான் ஒரு இடத்தில் இருந்து வருகிறேன். வேரொரு இடத்திலிருந்து. என்னைப்போல் மற்றவர்களும் இருக்கிறார்கள். அந்த இடத்தைப் பற்றி தெரிந்துகொள்ள உனக்கு ஆசை இருக்கும் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அதை உன்னால் புரிந்துகொள்ள முடியாது.”

“ஓ, சரி”, என்றாய் நீ – சற்றே சோகமாக. “ஆனால். நான் வெறு ஒரு காலத்தில் மறுபிறவி எடுத்தால், எதோ ஒரு கட்டத்தில் என்னுடனே நான் உரையாடி இருப்பேனே!”

“நிச்சயமாக! அது அப்போதுமே நடக்கக் கூடியது தான். ஆனால் இருவரும் அவர்களுக்கே உரித்தான அந்த வாழ்க்கையின் நினைவுகளை மட்டும் கொண்டிருப்பதால், இதை போன்ற ஒரு உரையாடல் நடப்பது பற்றி கூட உனக்குத் தெரியாது”

“”அதனால்? இதன் மூலமாக நான் என்ன தான் தெரிந்துகொள்ள வேண்டும்?”

“என்னது? நிஜமாகவே நீ வாழ்க்கையின் அர்த்தத்தை பற்றி கேட்கிறாயா? சலிப்பான கேள்வியாக தோன்றவில்லையா?”

“ஆமாம், ஆனால் நியாயமான கேள்வி தானே”, என்று வற்புறுத்தினாய்.

நான் உன் கண்களைப் பார்த்தேன். “வாழ்கையின் அர்த்தம், இந்த பிரபஞ்சம் உருவானதன் காரணம் எல்லாமே, நீ இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டும் என்பதற்குத் தான்.

“அதாவது, மானுடத்தைக் குறிக்கிறீர்களா? நாங்கள் இன்னும் முதிர்ச்சி அடைய வேண்டுமா?”

“இல்லை, நீ மட்டும் தான். நான் இந்த பிரபஞ்சத்தை உனக்காக மட்டும் தான் உருவாக்கினேன். ஒவ்வொரு புது வாழ்க்கையிலும் நீ வளர்ந்து முதிர்ச்சி அடைந்து இன்னும் பெரிய உயர்வான அறிவாளியாக மாற வேண்டும் என்பதற்காக”

“நான் மட்டுமா? மற்றவர்கள்?”

“வேறு யாருமே இல்லை”, என்றேன் நான். இந்தக் குறிப்பிட்ட பிரபஞ்சத்தில் நீ மட்டும் நான் மட்டும் தான்”

நீ ஏதும் புரியாமல் விழித்தாய். “ஆனால் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும்……”

“எல்லாரும் நீ தான். உன் வெவ்வேறு பிறவிகள்”

“என்ன? அனைத்துமே நானா?”

“புரிந்துகொண்டாயா?” என்றேன் நான் – உன் முதுகில் தட்டிக்கொடுத்துக்கொண்டே. “இதுவரை வாழ்ந்த எல்லா மனிதனும் நான் தானா?”

“ஆம், அத்துடன் இதற்கு பிறகு வாழ்ப்போவதும்”

“நான் ஆப்ரகாம் லிங்கனா?”

“ஜான் வில்க்ஸ் பூத்தும் நீ தான்”, என்றேன்.

“நான் ஹிட்லரா?”, என்றாய் நீ, வருத்தமாக.

“அவன் கொன்றுழித்த பல கோடி மக்களும் நீ தான்.”

“நான் யேசுவா?”

“ஆம். அவரை பின் தொடர்ந்த அனைவருமே நீ தான்”.

நீ மௌனமானாய்.

“ஒவ்வோரு முறை நீ ஒருவரைக் காயப்படுத்தும் போதும், நீ உன்னையே காயப்படுத்துகிறாய். நீ கருணையாக நடந்துகொண்ட ஒவ்வொரு முறையும் எதிரில் இருந்தவனும் நீ தான். எல்லா மனிதனும் அனுபவித்த ஒவ்வொரு சுக-துக்கம் அளித்த தருணம் – அனைத்துமே நீ அனுபத்தது தான்.”

நீ வெகு நேரம் சிந்தித்துக்கொண்டிருந்தாய்.

“ஏன்?” என்றாய். “ஏன் இதெல்லாம் செய்கிறீர்கள்”

“ஏனென்றால், ஒரு நாள் நீ என்னை போல் ஆகிவிடுவாய். ஏனென்றால் அது தான் நீ. நீ என்னைப்போன்ற ஒருவன். நீ என் குழந்தை.” “இருங்கள்…. ”, என்றாய் நீ – நம்பிக்கை இல்லாதவனாய். “நான் கடவுலா?”

“இல்லை. இன்னும் நீ கடவுள் இல்லை. நீ ஒரு கரு முட்டை. நீ இன்னும் வளர்ந்துகொண்டு தான் இருக்கிறாய். நீ எப்போது எல்லா காலக்கட்டத்திலும் உள்ள எல்லா மனிதனாகவும் வாழ்ந்து முடிக்கிறாயோ, அப்போது தான் நீ பிறக்கத் தயாராகுவாய்.”

“அப்படியானால் நீங்கள் சொல்வது.. இந்த மொத்த பிரபஞ்சமும் வெறும்…”

“ஒரு முட்டை”. என்றேன். “இப்போது உன் அடுத்த வாழ்விற்கு செல்ல நேரம் வந்துவிட்டது”.

நான் உன்னை உன் வழியில் அனுப்பி வைத்தேன்.

Previous Post

© 2025 Muralidharan

Theme by Anders Norén